ITamilTv

வெப்ப அலை : இன்று 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!

Yellow alert for 19 districts

Spread the love

Yellow alert for 19 districts : சென்னை வானிலை ஆய்வு மையம் 19 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தகதகக்கும் சூரியனால், வெப்ப அலை அதிகரித்துள்ளது.

இதனால், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

சூரியனின் வெப்ப உக்கிரம் அதிகரிப்பால் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. கடும் வெப்பத்தால் ஒரு சில இடங்களில் முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது.

இதையும் படிங்க : கொளுத்தும் வெப்பத்தால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு.. கண்டுகொள்ளாத அரசு – அன்புமணி கண்டணம்!

மேலும் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச வெப்பத்தை மே 1ம் தேதி பதிவு செய்துள்ளது.

 Yellow alert for 19 districts

நேற்று (01.05.24) 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 1983ம் ஆண்டு மே மாதம் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியதே உச்சபட்சமாக இருந்த நிலையில், நேற்றைய தினம் அது முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கடுமையான வெப்பம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி,

கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது Yellow alert for 19 districts.

இதையும் படிங்க : ரோவர், லேண்டரை படம்பிடித்த சந்திரயான் உந்து விசை கலன்


Spread the love
Exit mobile version