Site icon ITamilTv

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..!!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2023 காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, இதர அணைகளில் நீர்வரத்து அதிகமாகி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

தொடர் கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளது. அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், தாமிரபரணி மற்றும் இதர ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாகவும், அதே வேளையில் ஆறு மற்றும் குளங்களில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டத்தில் அதிகப்படியான குளங்கள் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆறு மற்றும் குளத்தின் கரைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இவ்விடங்களுக்கு சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version