Site icon ITamilTv

புயலும் இல்லை.. தென் மாவட்டங்களில் மிரட்டும் பேய் மழைக்கு என்ன காரணம்?

Spread the love

எந்தவொரு புயல் சின்னமோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமோ உருவாகாத சூழலில் தற்போது தென் மாவட்டங்களில் திடீர் கனமழை பொழிய என்ன காரணம் என்பது குறித்து குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடைவிடாத தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகிலேயே நீண்ட நேரம் நிலை கொண்டிருந்த காரணத்தால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இதே போன்று மிக கனமழை பெய்தது.

ஆனால் தற்போது எந்தவித புயல் சின்னமோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமோ உருவாகாத போதும் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென் குமரி கடல் பகுதியில் இருந்து 200 கி.மீ தொலைவில், இலங்கைக்கு தென் மேற்கு திசையில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவே இந்த கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த வளிமண்டல சுழற்சியானது அதே இடத்தில் நிலவி வருவதால் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது X பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்..

“தூத்துக்குடி காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ. (இது அந்த பகுதியின் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழையை விட அதிகம்).

24 மணி நேரத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழை என்றால் அது 1992ல் பதிவான காக்காச்சி (மாஞ்சோலை) 965 மி.மீ. அளவு பெய்தது தான். அதன் பிறகு பெய்த 2வது அதிக மழையும் இதுவாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்றொரு பதிவில் “காயல்பட்டினத்தில் இதுவரை 599 மி.மீ மழையும், ஸ்ரீ வைகுண்டத்தில் 525 மி.மீ மழையும், திருச்செந்தூரில் 507 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் சமவெளி பகுதிகளில் 24 மணிநேரத்தில் 50 செ.மீ மழை பதிவாகி உள்ளது. எந்த புயலும் இல்லாமல் பெய்வது. இது எங்கே முடியப்போகிறது என்று பார்க்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version