தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்துள்ள பருவ மழை பாரபட்சமின்றி வெளுத்து வாங்கி வருவதால் பேருஇம்பாலான் மாவட்டங்களில் நேற்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது,
இந்நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .
அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் கோவை மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.