சென்னை பள்ளிக்கரணையில் இளம் பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் (Honor killing) பெண்ணின் உறவினர்களால் கொடூரமாக ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் ஷர்மி என்ற இளம் பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவர் வீட்டுக்கும் தெரியவர அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பெற்றோர்களை எதிர்த்து இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர் .
இந்த திருமணம் இரு வீட்டார் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்த பிரவீனை எப்படியாவது கொல்ல வேண்டும் என பெண்ணின் சகோதரரான தினேஷ் திட்டம் தீட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு பிரவீனை சுத்துப்போட்ட தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரவீனை துடிக்க துடிக்க உயிர் போகும் வரை வெட்டி கொன்றுள்ளனர் .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த கொலை குறித்து வழக்கு பதிந்த போலீசார் பிரவீனை கொடூரமாக ஆணவக் கொலை செய்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் தினேஷ் உள்பட 4 பேர் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இந்த கொலை , SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : https://itamiltv.com/electric-car-factory-in-tuticorin-atikal-natiya-tn-chief-minister/
இது நாள் வரை கிராமங்களில் மட்டும் (Honor killing) அதிகம் நடந்து வந்த ஆணவ கொலைகள் இன்று சென்னையில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுமட்டுமின்றி இனி இதோபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பல நடவடிக்கைகள் ஏற்படுத்துவம் காவல் துறையும் சட்டமும் கடுமையாக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.