ITamilTv

பிரபல நகைக்கடையில் திடீர் தீ விபத்து! – ஒருவர் உயிரிழப்பு!

Spread the love

மதுரையில் பிரபல நகைக்கடை ஒன்றில் நேற்றிரவு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரையில் தெற்கு மாசி வீதியில் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான, ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நேற்றிரவு வழக்கம் போல ஊழியர்கள் கடையில் இருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த நகை கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த உள்ளே இருந்த ஊழியர்கள் பதறியபடி வெளியே ஒடி வந்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீர்நகர், அனுப்பானடி, தல்லாகுளம், ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கினர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தால் அப்பகுதி முழுக்க புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த தீ விபத்தின் போது, 3வது மாடியில் இருக்கும் கழிறையில் மோதிலால் என்பவர் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

இருப்பினும் புகை அதிகளவில் இருந்ததால் அவரை மீட்கும் பணிகள் சவால் நிறைந்த ஒன்றாக மாறியது. 3 மணி நேரம் கழித்தே மோதிலால் இருந்த இடத்திற்கு தீயணைப்பு துறையினரால் செல்ல முடிந்துள்ளது. அதற்குள் மூச்சுத்திணறல் காரணமாக மோதிலால் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில் இந்த தீ விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.


Spread the love
Exit mobile version