Site icon ITamilTv

Postpone : TNPSC தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்!

Postpone : TNPSC exam

Postpone : TNPSC exam

Spread the love

ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க (Postpone) வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 369 இடங்கள் காலியாக உள்ளது.

இந்நிலையில், காலியாக உள்ள 369 இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் வருகிற ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்களுடன், அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது..

“தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும், ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் 369 பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டுவராத நிலையில்,

அம்மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள், தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : https://itamiltv.com/mikjam-storm-damage-central-govt-should-provide-the-funds-requested-by-tamil-nadu-government-without-delay-anbumani-ramadoss/

ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ள தேர்வை ஒத்திவைக்க (Postpone) வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்து, எழுத்துத் தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேர்வாணையம் முழுவீச்சில் தயாராகி வருவது கண்டனத்திற்குரியது.

அரசுப் பணிக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும்,

ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


Spread the love
Exit mobile version