ITamilTv

ICICI சேவை கட்டண மாற்றங்கள்…மே 1 முதல் அமலுக்கு வருகிறது!

ICICI Service Charge Changes

Spread the love

ICICI : ஐசிஐசிஐ பேங்க் தனது வங்கியின் சேமிப்பு கணக்கில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

செக் புக் வழங்குவதற்கான கட்டணம், IMPS ட்ரான்ஸாக்ஷன்கான கட்டணம், டெபிட் கார்டு கட்டணங்கள், ATM ட்ரான்ஸாக்ஷன்கான கட்டணம் என பல வங்கி சேவைகளின் கட்டணங்களில் மாற்றங்கள் செய்துள்ளன.

மேலும், இந்த புதிய கட்டண மாற்றங்கள் மே 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வர இருக்கின்றன.

புதிய கட்டண அட்டவணையின் படி டெபிட் கார்டு கட்டணம் ஆண்டொன்றுக்கு வழக்கமான லொகேஷங்களுக்கு ரூ  200 ஆகவும், கிராமப்புறங்களுக்கு ரூ 99 ஆகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : April 23 Gold Rate : அதிரடியாக சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!

காசோலை புத்தகங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு  ஆண்டுதோறும் முதல் 25 காசோலைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை. 

அதன்பிறகு செய்யப்படும் ஒவ்வொரு காசோலைக்கும் ரூ 4 வசூலிக்கப்படும், மேலும் இந்த  பரிவர்த்தனைக்கு ₹25,000 உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண அட்டவணையின் படிப் பணப் பரிவர்த்தனை கட்டணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

DD / PO – ரத்துசெய்தல்/நகல்/மறு மதிப்பீடு என ஒவ்வொரு சேவைக்கும் தலா ரூ. 100 சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த கிளையில் மாதத்திற்கு 3 முறை செய்யும் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.

அதற்குப் பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 வசூலிக்கப்படும். 

சொந்த கிளை அல்லாத இடங்களில்  செய்யப்படும் ரூ.1,000 பரிவர்த்தனைக்கு ரூ.5 கட்டணமும், ரூ.25,000 பரிவர்த்தனைக்கு ரூ.150 கட்டணமும் ஒரு நாளைக்கு வசூலிக்கப்படும். 

ICICI Service Charge Changes

உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS) பரிவர்த்தனைகளுக்கு, ரூ. 1000 பரிவர்த்தனைக்கு ரூ 2.50 சேவை கட்டணமும், ரூ 1000 முதல் ரூ 25,000 வரை உள்ள பரிவர்த்தனைக்கு ரூ. 5 சேவை கட்டணமும், ரூ. 25,000 முதல் ரூ. 5,00,000 வரை உள்ள பரிவர்த்தனைக்கு ரூ 15 சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும்.

டெபாசிட் மிஷின்களில் பணப் பரிவர்த்தனை செய்தால் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். 

வங்கி விடுமுறை நாட்களில் மற்றும் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை டெபாசிட் மிஷின்களில் ரூ.10,000க்கு மேல் செய்யப்படும் வைப்புத் தொகைகளுக்கு இந்த கட்டணம் மாறும்.

தேர்ட் பார்ட்டி மூலம் செய்யப்படும் கேஷ் ட்ரான்ஷாக்ஷன்களுக்கு, ஒரு டிரான்ஸாக்ஷனுக்கு ரூ 150 என் வசூலிக்கப்படும், மேலும் இந்த ட்ரான்ஷாக்ஷன்களுக்குகான அதிகபட்ச லிமிட் 25,000 ரூபாய்.

போட்டோ அல்லது சிக்னேச்சர் அட்டஸ்டேஷன் செய்ய ஒரு விண்ணப்பத்துக்கு ரூ100 வசூலிக்கப்படும்.

ECS/ NACH டெபிட் ரிட்டன்கள் நிதி காரணங்களுக்காக  ஒவ்வொரு முறையும் ரூ 500 வசூலிக்கப்படும். ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே இந்த சேவையைப் பெற முடியும் (ICICI).

இதையும் படிங்க : குரூப் 1 B, C பிரிவு பணிகளுக்கு அறிவிப்பு வெளியீடு; இன்று முதல் மே 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; முதல்நிலை தேர்வு – ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது


Spread the love
Exit mobile version