நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெறும் இந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு, ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.மேலும் வாக்கு சேகரிப்பின் போது பண பட்டுவாடா ஏற்படாத வண்ணம் அதனை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர் . இந்த நிலையில், நேற்றுடன் தேர்தலக்கான பிரச்சாரங்கள் முடிவடைந்தனர்.
இந்த நிலையில், மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்க மாட்டாது என்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விவதாதையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – அப்போ 12 ஆவணங்களில் ஒன்று போதும்..-தேர்தல் ஆணையம்!