கன்னியாகுமரி மாவட்டத்தில், தேர்தலைப் புறக்கணிப்பதாக வலிய ஏலா கிராமத்தின் போர்டு (kumari) வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் புறக்கணிப்பு :
கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட வலிய ஏலா கிராமத்தில் 4 தலைமுறையாக 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இதுவரையிலும் செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊர் எல்லையில் அப்பகுதி மக்கள் பேனர் வைத்துள்ளனர்.
Also Read : https://itamiltv.com/director-amir-is-being-questioned-at-the-office-of-the-national-narcotics-control-unit/
விளவங்கோடு தாலுகா, கடையால் பேரூராட்சி வலிய ஏலா பகுதியில் நான்கு தலைமுறையாக சுமார் 200 குடும்பங்களுக்கு சாலை, மின் இணைப்பு, குடிநீர் வழங்காததால் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.
மேற்படி எந்த அரசியல் கட்சியினரும், வாக்கு கேட்டு (kumari) எங்கள் ஊருக்குள் வரவேண்டாம். – இப்படிக்கு ஊர்மக்கள், வலிய ஏலா. இவ்வாறு அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.