Tamilnadu

“வெறும் பொய்யா பரப்பிட்டு சுத்துறாங்க… இந்தியாவில் உலா வரும் பாசிச கும்பல்!..” – உதயநிதி தடாலடி!

udhayanidhi_stalin

இந்தியாவில் பொய் செய்திகளை பரப்புவதையே முழு நேர வேலையாக ஒரு பாசிச கும்பல் செய்து வருவதாகவும் தான் பேசியதை திரித்து தன் தலைக்கு 1 கோடி விலை பேசியதாகவும் துணைமுதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நாட்டு நலப் பணித் திட்ட அமைப்பு (NSS) மாணவர்களுக்கு ‘சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது’ குறித்த மூன்று நாள் பயிற்சி பட்டறை சென்னையில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” இந்தியாவில் உள்ள பாசிச கும்பல் பொய் செய்திகளை பரப்புவதை முழு நேர வேலையாக செய்து கொண்டு உள்ளனர்” என தெரிவித்தார்.

மேலும், பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து மக்களை காக்கும் NSS மாணவர்களுக்கு வருடாந்திர ஊக்கத்தொகை 50 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்து வழங்கி உள்ளதாகவும் டெல்லியில் நடைபெறும் குடியரசு விழாவில் பங்கேற்க NSS மாணவர்கள் விமானம் மூலமாக செல்வதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை அதிகம் பரப்பி வருகிறார்கள். உண்மை எவ்வளவு வேகமாக செல்கிறதோ பொய் செய்தி மூன்று மடங்கு வேகமாக செல்கிறது.

இந்தியாவில் உள்ள பாசிச கும்பல் பொய் செய்திகளை பரப்புவதை அடிப்படை கொள்கையாக கொண்டு முழு நேர வேலையாக செய்து கொண்டு வருகின்றனர். பொய் செய்தி மூலம் மக்களை குழப்ப வேண்டும், அவர்களை மழுங்கடிக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்.

வதந்திகளில் மிஸ் இன்ஃபர்மேஷன் மற்றும் டிஸ் இன்ஃபர்மேஷன் என இரண்டு வகை உண்டு. மிஸ் இன்ஃபர்மேஷன். என்பது எந்தவித உள் நோக்கமும் இல்லாமல் பரவுகின்ற செய்திகள்.

ஆனால் டிஸ் இன்ஃபர்மேஷன் என்பதுதிட்டமிட்டு ஒரு உள்நோக்கத்தோட பரப்பப்படுகின்ற அந்த பொய் செய்தி. டிஸ் இன்ஃபர்மேஷன் விட டிசைன் ஃபார்மேஷன் மிக மிக ஆபத்தானது” என்று கூறினார்.

இதற்கு உதாரணமாக, “சனாதனத்தை குறித்த தனது பேச்சை திரித்து அதை இனப்படுகொலைக்கு தூண்டுவதாக என்மேல் பொய் செய்தி பரப்பினார்கள் . இந்த விவகாரத்தில் எனது தலையை சீபவர்களுக்கு 10 லட்சம் தருகிறேன் என ஒரு சாமியார் கூறினார். இன்னொரு சாமியார் போட்டி போட்டுக் கொண்டு உதயநிதி தலையை சீபவர்களு்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என தனது தலைக்கு விலை பேசினார்கள்” என கூறினார்.

கடந்த 2023, செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அதில் அவர் பேசுகையில், சநாதன தர்மம் சமூக நீதி, சமத்துவத்திற்கு எதிரானது. அதை ஒழிக்க வேண்டும் எனவும் கரோனா வைரஸ், மலேரியா மற்றும் டெங்குவுடன் சநாதன தர்மத்தை ஒப்பிட்டு அவர் பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைத்துள்ளதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *