Adani Group : அதானி குழுமத்தில் 12 வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முக்கியத் தகவல்கள் மறைப்பு… செபியின் அறிக்கை கூறும் உண்மை….
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்த அறிக்கை ஒன்றை கடந்த ஆண்டு வெளியிட்டது.
அந்த அறிக்கையின் படி, அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.
ஹிண்டன்பர்க் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
அதானி குழுமத்துக்குப் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : தமிழகம், கேரளா, கர்நாடக மாநில எல்லைகளில் அனல் பறக்கும் சோதனை!
மேலும் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் கடும் சரிவைச் சந்தித்தனர்.
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்றும், பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்குப் பாதுகாப்பான கட்டமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பரிவர்த்தனைகளைச் செபி ஆய்வு செய்து வந்தது.
இதில் அதானி நிறுவனத்தின் முதலீடு செய்துள்ள 12 வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முக்கியத் தகவல்களை மறைத்ததையும், பல்வேறு விதிமீறல்கள் மற்றும் முதலீட்டு வரம்பு மீறல்கள் செய்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.
இதை அடுத்து விதி மீறல்கள்பற்றி விளக்கம் தருமாறு இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி சார்பில் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
அதைத் தொடர்ந்து, அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள 12 வெளிநாட்டு நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் அபராதம் செலுத்துவதன் மூலம் தீர்வுகான விரும்புவதாக எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விதி மீறல்களில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது Adani Group.
இதையும் படிங்க : ” அரிசிக் கடத்தலுக்கு துணைபோகும் திமுக அரசு..” லிஸ்ட் போட்ட ஓபிஎஸ்!