Tamil Nadu and Kerala State Borders Action Test: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், முதல் கட்டமாகத் தமிழகத்தில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
கேரளாவில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதியும், கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய திதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது.
தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்றுடன் முடியவுள்ள நிலையில், தமிழக-கேரள மாநில மற்றும் தமிழக-கர்நாடக மாநில எல்லைகளில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது.
அதன் படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியிலும், நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள நாடு காணி, பாட்ட வயல், சோலாடி, நம்பியார் குன்னு, தாளூர் உள்ளிட்ட 6 சோதனைச் சாவடிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
கேரளாவிலிருந்து வரும் வாகனங்களைத் தமிழக பறக்கும் படை அதிகாரிகளும், தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வாகனங்களைக் கேரள பறக்கும் படை அதிகாரிகளும், சோதனை செய்த பின்பே எல்லைகளில் அனுமதித்து வருகின்றனர்.
அதேபோல் கர்நாடகாவிலிருந்து வரும் வாகனங்களைத் தமிழக பறக்கும் படை அதிகாரிகளும், தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வாகனங்களைக் கர்நாடகா பறக்கும் படை அதிகாரிகளும், சோதனையிட்ட பிறகே எல்லைகளில் அனுமதிகின்றனர்.
சோதனையின்போது உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லும் பணம் மற்றும் விலையுர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Tamil Nadu and Kerala State Borders Action Test
இதையும் படிங்க :பரப்புரையின்போது மயங்கி விழுந்த நிதின் கட்கரி