ITamilTv

Indian 2 Shooting Spot Issue | ”இந்தியன் 2 படப்பிடிப்பு..” முற்றுகையிட்ட பொதுமக்கள்!! கலக்கத்தில் கமல்…

Spread the love

 கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்து சதுரங்கப்பட்டினத்தில் டச்சுக்காரர்களால் உருவாக்கப்பட்ட கோட்டை அமைந்துள்ளது.

Director Shankar Shares Still From Shooting Location of Kamal Haasan's Indian  2

இந்த கோட்டையை தொல்லியல்துறை பாதுகாத்து ,பராமரித்து வருகிறது. இந்த நிலையில்  இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த மூன்று நாட்களாக அந்தக் கோட்டையில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் கமலஹாசன் பங்கேற்கும் முக்கிய சண்டைக் காட்சிகள் அந்த கோட்டையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மற்ற நடிகர்களை வைத்து சண்ட காட்சிகள் வைத்து இறுதி காட்சியாக எடுக்கப்பட்டது.

இந்த நிலையில்  இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து கிராம மக்கள் சார்பில் படப்பிடிப்பு குழுவினரிடம் கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்க்கு நன்கொடை கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்ட பெற்ற நிலையில்  டச்சு காரர்களின் கோட்டையின் நுழைவாயிலில் கிராம பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்து வந்த சதுரங்கப்பட்டின காவல்துறையினர் அங்கு வந்த கிராம மக்களிடமும் படப்பிடிப்பு குழுவினரிடமும் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால் டச்சுகோட்டை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


Spread the love
Exit mobile version