Site icon ITamilTv

mgr birth day-எம்ஜிஆர் to அரவிந்த்சாமி.. பேனர் வைத்த அதிமுகவினர்!

mgr birth day

mgr birth day

Spread the love

mgr birth day-நாடு முழுவதும் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் வெகு விமரசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,

எம்ஜிஆருக்கு பதிலாக நடிகர் அரவிந்த சாமியின் புகைப்படத்தை அச்சிட்டு அதிமுகவினர் பேனர் வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

திரைத்துறையிலும், அரசியலிலும் கொடிகட்டிப் பறந்த எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இலங்கை கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோபால மேனன், தாய் மருதூர் சத்யபாமாவுக்கும் எம்ஜிஆர்மகனாகப் பிறந்தார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.

இதையும் படிங்க : https://itamiltv.com/samayapuram-mariamman-temple-thaipusam-festival-started-today/

இதனையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மட்டுமின்றி பொதுமக்கள் அவர்களின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் எம்ஜிஆர் புகைப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைத்தனர். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

அதில் எம்ஜிஆர் வேடத்தில் தலைவி என்ற படத்தில் அரவிந்த சாமி நடித்திருந்தார்.அந்த புகைப்படத்தை பெரிய அளவில் வைத்துள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இன்று எம்ஜிஆருக்கு பிறந்த நாளா.? அல்லது அரவிந்த சாமிக்கு பிறந்த நாளா என கிண்டலாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தலைவி திரைப்படம்:

இந்திய நடிகையும், அரசியல்வாதியுமான ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2021இல் வெளியான வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகும்.

இந்தத் திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாத்தும், ம. கோ. இ ராமச்சந்திரனாக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.

இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1747487596589310149?s=20

அரசியல் பயணம் :

சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சிறிது காலத்திலேயே தேசிய அரசியலில் இருந்து விலகிய எம்ஜிஆர், அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகத்தில் 1953ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1962இல் தனது 50வது வயதில் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1967இல் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் எம்ஜிஆர். 1969இல் திமுகவின் பொருளாளராக எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார்.

1969இல் அண்ணாதுரை காலமான பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்றார் கருணாநிதி. திரையுலகிலும், அரசியலிலும் பங்காளிகளாக இருந்து வந்த கருணாநிதிக்கும்,

எம்ஜிஆருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஒரு கட்டத்தில் திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார்.

1972 அக்டோபர் 18ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய எம்ஜிஆர்(mgr birth day)கட்சியைத் தொடங்கினார்


Spread the love
Exit mobile version