சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு Self Baggage Drop என்னும் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Self Baggage Drop எப்படி செயல்படும்?
பயணிகள் தானியங்கி இயந்திரத்தில் தங்களின் PNR எண்ணை பதிவு செய்து, போர்டிங் பாஸை பெற்றுக்கொள்ளலாம்.
பின் அந்த பாஸை மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
அதில் எந்நெத்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள், தோன்றும்.
பின் அதில் OK கொடுத்து உடைமைகளின் எண்ணிக்கை குறித்து பதிவிட வேண்டும்.
அப்போது உடைமைகளின் மொத்த எடை ஸ்கிரீனில் தோன்றும். பின் உடைமைகளில் ஒட்டிக்கொள்வதற்கான Tag-கள் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும்.
Tag-ஐ நாமே ஒட்டி உடைமைகளை கன்வயர் பெல்டில் வைத்துவிட்டால் விமானத்தில் ஏற்றுவதற்கு கொண்டு செல்லப்படும்.
இதனால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.