Site icon ITamilTv

Manipur | மணிப்பூர் விரைந்த 53 அதிகாரிகள் கொண்ட குழு..CBI அதிரடி உத்தரவு!!

Spread the love

மணிப்பூர் (Manipur)வன்முறை தொடர்பாக விசாரிக்க,CBI இணை இயக்குநர் தலைமையில் 53 அதிகாரிகள் கொண்ட குழுவை சிபிஐ அமைத்து உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் குக்கிஇன சமூகத்தினருக்கும் மெய்தி இன சமூகத்திற்கும் இடையே போராட்டம் வன்முறையாக வெடித்தது.3 மாதங்களாக நடைபெற்ற வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மேலும் குக்கி இன பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்பட்ட வீடியோ வெளியாகி நட்டையே உலுக்கியது.இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

கடந்த 7ஆம் தேதி அளித்த உத்தரவின் பேரில் 11 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, 2 டிஐஜிக்கள், 2 கூடுதல் எஸ்.பி.க்கள், 6 டிஎஸ்பிக்கள் உட்பட 53 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாரணையில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில்,உள்ளூர் அதிகாரிகளின் பங்களிப்பை குறைக்க சிபிஐ விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version