World

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் செல்ல அனுமதி.. எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா?

ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தி கப்பல்கள் செல்ல அனுமதிக்கும் நாடுக்களை 5 நாட்டுகளுக்கு மட்டுமே வரையறுத்துள்ளது.

இந்த அறிவிப்பு, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமாகி, மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமின்றி உலகளாவிய எரிபொருள் சந்தையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய பின்னர் வந்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்காவின் ஆதரவுடன் போர்ப் பகுதியில் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.மத்திய கிழக்கு போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதனால், கச்சா எண்ணெய் மற்றும் உரங்கள் விலை உலகளவில் உயர்ந்துவிட்டது.

அதன்படி, ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கோரிக்கையின் பேரில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈராக் போன்ற 5 நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே ஹார்முஸ் நீர்நிலையைக் கடக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை; எதிரிகளுக்கே மட்டுமே தடையுண்டு, அனுமதிக்கப்பட்ட நாடுகள் ஈரானின் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

மேலும், இந்த கப்பல்களுக்கு “பாதுகாப்பு கட்டணம்” வசூலிக்கும் சட்டத்தை ஈரான் நாடாளுமன்றம் தயாரித்து வருகிறது. இதனால் அனுமதி பெற்ற நாடுகள் போரில் ஈரானை எதிர்த்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது என்றும் ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *