Site icon ITamilTv

”போர் என்பதே கொடூரமானது” இஸ்ரேல்-பாலஸ்தீன போர் குறித்து.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!

Spread the love

போர் என்பதே கொடூரமானதுஅது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும்,அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள் தான் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின்(mk Stalin) வேதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே நீண்டகாலமாக மோதல் இருக்கிறது. கடந்த 7 ம் தேதி ‘ஹமாஸ்’ தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் 9 வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.

தற்போது வரை 2 தரப்பையும் சேர்த்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில்,இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின போர் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்,போர் என்பதே கொடூரமானதுஅது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக #Gaza பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் – உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.

போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா?உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது.

ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version