ITamilTv

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை..!!

Spread the love

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல துறைகள் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.அந்தவகையில் தற்போது தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .

எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் எ.வ.வேலு வரி ஏய்ப்பு ஏதேனும் செய்துள்ளாரா என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது .

கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது . இதில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது .


Spread the love
Exit mobile version