Site icon ITamilTv

Jackpot : வீடு தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம்… அசத்தல் அறிவிப்பு!!

Jackpot

Jackpot

Spread the love

வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் (Jackpot) என்று மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அசத்தல் திட்டம் (Jackpot) இந்த வாரமே தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Pink Squad : சென்னை மெட்ரோ ரயிலில் களமிறங்கியுள்ள பிங்க் ஸ்குவாட்!!

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது அவர் 55 நிமிடம் பட்ஜெட் உரையில் பேசினார். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், 300 யூனிட் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.

அதன்படி, வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இந்த வாரமே தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே சோலார் அமைத்தவர்களுக்கு இந்த மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக இங்கே விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

முதலில், தனியார் அல்லது அரசின் உதவியோடு வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைக்க வேண்டும்.

வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைந்துள்ளதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.

அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அந்த குறைந்த பட்ச மின்சார தேவையை அரசே ஏற்றுக்கொள்ளும்.

இதையும் படிங்க : அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்ற மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த விவகாரம்! அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

மேற்கூரையில் சோலார் அமைத்த பின்னர் மாதம் நீங்கள் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்த முடியும்.

சோலார் திட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் சில அறிவிப்புகள் :

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது என்று கூறினார்.


Spread the love
Exit mobile version