Site icon ITamilTv

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: புதிய வீடியோவை வெளியிட்டது யார்? – மிரள வைக்கும் சந்தேகங்கள்!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி மரணம் தொடர்பான விவகாரம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது

அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில், இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் மாணவி மரணம் நடத்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 13 ஆம் தேதி பிளஸ் 2 மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது. இந்த நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேக இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றச்சாட்டினர். இதனால் மாணவிகளின் அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அது கலவரமாக மாறியது.

பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள், 50-க்கும் மேற்பட்ட பள்ளியின் வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். மேலும் சென்னை – சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்ட கும்பல், போலீசார் தடுப்புகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர். போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதனால் நிலைமைக் கட்டுபடுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

போலீசாரின் தடுப்புகளை உடைத்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்து எரித்தனர். ஆயிரக்கணக்கானோர் கூடியதால் , நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வெளி மாவட்டத்திலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிககை விடுத்தார்.

மேலும் கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிப்பதாகவும் மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதி ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. எலும்பு முறிவு, ரத்தச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவரின் மேலாடை, கால் சட்டை, மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்த கறை இருந்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மாணவின் இரண்டாவது உடற்கூறு ஆய்வு ஜிப்மர் மருத்துவமனை குழுவினரின் சோதனைக்கு அனுப்பட்டது. மாணவி மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த 13 ஆம் தேதி முதல் 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

அதேவேளையில், மாணவியின் மரணம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின் போது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரின் சொந்த கிராமமான பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டிற்கு தற்போது கொண்டு வரப்பட்டு மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அவரின் பெற்றோர், கிராம மக்கள் அஞ்சலிக்கு பின் மாணவி ஸ்ரீமதியின் உடல் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாணவியின் விசாரணை குறித்து 3-வது சிசிடிவி வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அந்த சிசிடிவி காட்சியில், மாணவியை 4 பேர் தூக்கி செல்வதுபோன்று காட்சி இடம்பெற்றிருந்தது. சிசிடிவி காட்சியில் பல்வேறு சந்தேகங்களை மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிசிடிவி காட்சி முற்றிலும் பொய்யெனவும் ஸ்ரீமதியின் தாய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீமதியின் தாய் தெரிவிக்கும்பொழுது;

‘நேற்று வெளியான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என்றும் இது போன்ற காட்சிகள் யார் வெளியிடுகிறார்கள் என தெரியவில்லை என்றும் இது ஒரு அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version