Site icon ITamilTv

Kanimozhi Karunanidhi : யாரும் சந்திக்க வராதிங்க!

Kanimozhi Karunanidhi

Kanimozhi Karunanidhi

Spread the love

என் பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் படி கேட்டுக்கொள்கிறேன் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி (Kanimozhi Karunanidhi) தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாநிலங்களில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வெள்ளமானது பொதுமக்களை புரட்டி போட்டது.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டிசம்பர் மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியது. இரண்டு நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கியது.

மிக்ஜாம் புயல் சென்னை அருகே கரையைக் கடக்காமல் சென்னை அருகே நீண்ட நேரம் நிலை கொண்டதே மழை கொட்டி தீர்க்க காரணமாக அமைந்தது. அதன் பிறகு நீர் வடிந்து சென்னை இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் வரை ஆனது.

அதேபோல கடந்த மாதம் இறுதியில் தென் மாநிலங்களில் பல மணி நேரம் மழை நின்று பெய்த கனமழையால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில் தண்ணீர் வடிந்த போதிலும், இந்த கனமழையால் மிக மோசமான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழை வெள்ளத்தால் அதிகம் பாதிப்படைந்த 4 வட்டங்கள் மற்றும் 11 வருவாய் கிராமங்களுக்கு ரூ.6000 மற்றும் ஓரளவு பாதிப்படைந்த பிற அனைத்து பகுதிகளுக்கும் ரூ.1000 என சிறப்பு நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : https://itamiltv.com/appropriate-action-will-be-taken-on-the-demands-and-problems-of-the-transport-unions-workers-minister-sivashankar/

மேலும், நாளை 04.01.2024 முதல் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணிகள் ரேஷன் கடைகளில் தொடங்கப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகை வர இருக்கும் காரணத்தால் அதற்கு முன்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

இந்தநிலையில், திமுக எம்பி கனிமொழி கருணாநிதியின் (Kanimozhi Karunanidhi) பிறந்த நாள் வருகிற ஜனவரி 5ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

எனவே, அவரது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் நேரில் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்ற மாதம் தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

சென்னையில் வெள்ளம் வடிவதற்குள் மற்றுமொரு பேரிடராக, தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர்.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி அதிக பாதிப்புக்குள்ளானது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டங்களாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்து இயல்புநிலை திரும்பிட களத்தில் எல்லோரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

இச்சூழலில் எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என கனிமொழி தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version