Site icon ITamilTv

ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து..!

Spread the love

ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சூரியனை ஆராய ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சிஎல் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது

உலகிலேயே நிலவின் தென்துருவத்துக்கு மிக அருகே தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையைப் பெற வைத்த இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அடுத்து தனது பார்வையை சூரியன் பக்கம் திருப்பியிருக்கிறது.

நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம், புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜிக்கு வாழ்த்துகள்.

நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version