ITamilTv

மகளிர் இடஒதுக்கீடு மசோதா கண்துடைப்பு நாடகம் – கனிமொழி எம்.பி விமர்சனம்

Spread the love

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்திருப்பது ண்துடைப்பு நாடகம் போல் இருப்பதாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி கூறியதாவது :

மகளிர் இடஒதுக்கீடு மசோதா செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும். மசோதாவை கொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் செயல்படுத்துவோம் என்பது கண்துடைப்பு போல் இருக்கிறது.

மசோதாவை இந்த தேர்தலுக்காக கொண்டுவந்ததாக தெரியவில்லை, ஆனால் தேர்தலுக்கான ஒரு அறிவிப்பு. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்துவிட்டோம், பெண்களுக்காக நாங்கள் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்திருக்கிறோம் என வாக்கு வங்கிக்காக கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version