கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் தர்ஷன், தனது தோழியை கிண்டல் செய்த ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில நடிகர் தர்ஷன் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து தர்ஷன் அடைக்கப்பட்டிருந்த பிளாக்கில் கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் நடிகர் தர்ஷனுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று கர்நாடகா உயர் நீதிமன்றம் 6 மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.