ITamilTv

“வெள்ளம் ஏற்பட வாய்ப்பு” முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவு

Spread the love

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் குறிப்பிட்ட இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமையா கூறியதாவது :

கர்நாடகாவில் கடற்கரையோர பகுதி, வடக்கு உள் மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட இடங்களில் அரசு ஆய்வு செய்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் மக்களை காக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version