திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது ஆயிரக்கணக்கான பக்கதர்களின் முழக்கத்துடன் மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள பல முக்கிய புன்னியஸ்தலங்களில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.அந்தவகையில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.
இரவு வசந்த மண்டபத்தில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாதாரனை நடைப்பெற்றது அதைத்தொடர்ந்து அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி கோயில் உள்பிரகாரம் மற்றும் தேரடி வரை திருவீதி உலா நடைப்பெற்றது.
பின்னர் சொக்கப்பனை முன் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அம்மன் தேரோடும் வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.