முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு பகுதிகளும் தன்னிடம் மிகவும் முக்கியமானவை என்று தெரிவித்தார். “கரூரும் கோவையும் எனக்கு உடலும் உயிரும் போன்றவை” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், “கரூரிலிருந்து அரவக்குறிச்சிக்கு சென்று போட்டியிட்டபோது நான் எந்த பயத்திலும் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகள் தோல்வி அச்சத்தால் சாதனைகளை முன்வைக்க முடியாமல் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன” என்றும் கூறினார்.
தொடர்ந்து, “ திமுக கட்சித் தலைமை என்ன தீர்மானிக்கிறதோ அதையே கடைப்பிடிப்பது தொண்டனின் பொறுப்பு.
எனக்கு தனிப்பட்ட கோரிக்கைகள் எதுவும் இல்லை. கரூரிலிருந்து கோவைக்கு பல திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தியுள்ளோம். இனிமேல் கோவையிலிருந்து கரூரை கவனிப்போம்” என்றார்.
அவர் மேலும், “ஒரு உடல் இயங்க உயிர் அவசியம் என்பதுபோல, கரூரும் கோவையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. என்னை அரசியலில் அறிமுகப்படுத்தியது கரூர்.
அங்கு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கரூர் மற்றும் கோவை மக்களுக்கு தேவையான அனைத்தையும் முதலமைச்சர் செய்து தருவார்” என நம்பிக்கை தெரிவித்தார்.

