வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சென்னையின் பல பகுதிகளில் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் பிற்பகல் சுமார் 3 மணியளவில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது திமுக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கரூர் சம்பவங்கள் மற்றும் செந்தில் பாலாஜி தொடர்பான விவகாரங்களையும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
கரூரில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசும்போது, தன் மீது தவறான பழி சுமத்தப்படுவதாகவும், மக்கள் உண்மையை அறிந்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.
நாமக்கல் முதல் கரூர் வரை வந்த அனுபவத்தை எடுத்துரைத்து, தன் மீது அரசியல் காரணங்களுக்காக திமுக அரசு ப்ழி சுமத்தியாக தெரிவித்தார்.
மேலும் தன்னிடம் நீதியை மக்கள் வழங்க வேண்டும் என்றும், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இது தலைமுறைக்கான முக்கியமான தேர்தல் என்று கூறி, தாம் பொய்யாக பேச மாட்டேன் எனவும் உறுதியாக தெரிவித்தார்.

