Site icon ITamilTv

புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கஸ்தூரி – செய்தியாளர் சந்திப்பு!

Spread the love

கடந்த 3-ஆம் தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில், நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மதுரை திருநகர் காவல்நிலையத்தில் நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர்.

இதனிடையே தனது வீட்டை பூட்டி சென்று விட்டு, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர்.

அதையடுத்து அவரை வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நடிகை கஸ்தூரி தரப்பில், தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

அவரை ஜாமீனில் விடுவிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சென்னை புழல் சிறையிலிருந்து கஸ்தூரி விடுவிக்கப்பட்டார்.

அப்போது சிறைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

“என்னை நேசிக்கும் தமிழக அரசுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி. எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி. தெலுங்கானா, ஆந்திரா மக்களுக்கும் மிகப்பெரிய நன்றி.” என தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version