ITamilTv

fare reduction :அரசுப் பேருந்துகளில் கட்டணம் குறைப்பு!

fare reduction

Spread the love

கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து முனையம் மாறியதால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டு (fare reduction) உள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட பெரியது.

இந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து முனையம் மாறியதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டு (fare reduction) உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுகின்றன. இதனால் பயண தூரம் குறைந்ததால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.

அதன் படி சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ₹20 முதல் ₹35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

fare  reduction
Fee reduction

கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ₹460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ₹430 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோயம்பேட்டில் பேருந்து ஏற முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை திருப்பி தரப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த தொகை பயணம் தொடங்கும்போதே நடத்துநர்களால் வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இது நாட்களும் கோயம்பேட்டிலிருந்து நேரடியாக தெற்கு பகுதிக்கு செல்லும் பேருந்துகள் இனிமேல் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும்.

கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். அதேபோல தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும்.

எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.

https://itamiltv.com/setc-writes-that-there-is-no-enough-space-in-kilambakkam-bus-stand-tn-cm-stalin-inaugurates-kilambakkam-bus-terminus/

அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.



Spread the love
Exit mobile version