சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகளிர் உரிமை தொகை ATM கார்டு பெற வருகை தந்த 2000 பேருக்கு அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன்(KR Periyagaruppan) கறிவிருந்து அளித்தது வைரலாகி வருகிறது
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.
இதனை தொடர்ந்து மாவட்டம் வாரியாகதமிழ்நாடு அமைச்சர்கள் தொடங்கி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி PLP திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் உரிமை தொகை ATM கார்டு பெற 2000க்கும் மேற்பட்ட பெண்கள் வருகை தந்திருந்தனர்.மகளிர் உரிமை தொகை ATM கார்டை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத், மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி வழங்கினர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.தற்பொழுது இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது