ITamilTv

Kuwait fire accident : அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

Kuwait fire accident

Spread the love

Kuwait fire accident : குவைத்தின் மெங்காப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு தளத்தின் சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதால் தீ விபத்தில் சிக்கி இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள்.

இவர்களில் பெரும்பாலோனார் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக அயலக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தூதரகம் மூலம் முதல்கட்டமாக கிடைத்த தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் – பி.பி.டி.சி. நிறுவனம்!

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,

குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.

உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழக அயலக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அவரது வீட்டில் சந்தித்து, தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு உடல்களை மீட்டுத் தரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குவைத் தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது (Kuwait fire accident).

இந்தியாவிற்குள் : +91 1800 309 3793 என்ற எண்ணிற்கும்,

வெளிநாட்டில் : +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version