பிரபல நடிகர் ரோபோ சங்கர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இவர் மாரி ,வீரம் ,உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ்பெற்றவர்.
இந்த நிலையில் ஹோம் டூர் என்ற நிகழ்ச்சி மூலம் சமூகவலைதளத்தில் தனது வீட்டை வீடியோ எடுத்த பொழுது அதே அலெக்சாண்டர் கிளி என்று காட்சிப்படுத்தப்பட்டது. இதனைக் கண்டு வனத்துறையினர் கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டில் நுழைந்து வீட்டில் அனுமதி இன்றி வளர்த்த இரண்டு அலெக்சாண்டர் கிளிகளை மீட்டனர்.
பின்னர் பறிமுதல் செய்த கிளிகளைக் கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர். மேலும் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி இலங்கைக்குச் சென்று இருந்ததால் அவரை விசாரிக்கு ஆட்சராக வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டன.
இதனை தொடர்ந்து ரோபோ சங்கர் வனத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில் முன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவியின் தோழி ஒருவர் பணி மாறுதல் காரணமாக வேறு ஊருக்குச் செல்வதால் வீட்டில் வளர்க்கப்பட்ட கிளியை தங்களுக்கு வளர்க்கச் சொல்லி அன்பளிப்பாகக் கொடுத்ததால் இரு கிளைகளும் பிகில் ஏஞ்சல் எனப் பெயர் வைத்தது வளர்த்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வகையான கிளிகளை வளர்க்க அனுமதி வாங்க வேண்டும் என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் இதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து ரோபோ சங்கர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு எதுவும் பதியாமல் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை தொடர்ந்து ரோபோ சங்கர் அபராத தொகையை விதித்ததுடன் இது குறித்த விழிப்புணர்வு காணொளி வெளியீட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.