pocso act -பைக் வாங்கித்தருவதாக கூறி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி பாஜக மாநில பொருளாதாரப்பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக உள்ளவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பாஜக பிரமுகரான எம்.எஸ்.ஷா மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் தனது மகளின் செல்போனில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் இருந்து வந்ததாகவும்,
இதையும் படிங்க: திருமாவிடம் பா.ஜ.கவை அடமானம் வைத்துவிட்டார்கள் – தடா பெரியசாமி தடாலடி
இதையடுத்து தனது மகளை கேட்டபோது தனது மனைவி பாஜக பிரமுகரிடம் அடிக்கடி பள்ளிக்கு அழைத்து செல்ல விடாமல் தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துசென்று தனியாக இருந்துவந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும் வாட்ஸ் அப் மூலமாக நான் கூப்பிடும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தையை கூறி அழைத்துசென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.
மேலும் இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீது போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக நிர்வாகி கல்லூரி நடத்திவரும் நிலையில் அவர் மீது பள்ளி மாணவியின் தந்தை அளித்த புகாரின் கீழ் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.