நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் சிறுத்தை (Leopard Attack) தாக்கி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் தோட்டப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த பச்சிளம் சிறுமி ஒருவரை திடீரென சிறுத்தை தாக்கியுள்ளது .
இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுத்தையை (Leopard Attack) விரட்டினர் .
இதையடுத்து பலத்த காயங்களுடன் மீட்க்கப்பட்ட அந்த சிறுமியை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர் .
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அந்த சிறுமையை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும் அந்த சிறுமி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தற்போது சிறுமியின் இழப்பை தானாக முடியாத அவரின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் இச்சம்பவம் குறித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர் .
இதுமட்டுமின்றி பந்தலூர், கூடலூர் தாலுகாவில் கடைகளை அடைத்து ஊர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் எப்பாடு பட்டாவது சிறுத்தையை பிடிக்கிறோம் தற்போது கலந்து செல்லுங்கள் என்று கேட்டு ஊர்மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
Also Read : https://itamiltv.com/investor-conference-starts-in-chenna/
உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளால் பலர் உயிர்கள் பறிபோகின்றது .
இச்சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது நீலகிரியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிறியவர் பெரியவர் என பாரபட்சமின்றி தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் அந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.