டெல்லி முதல்வர், ஜார்க்ணட் மாநில முதல்வர் என ஊழலில் ஈடுபட்ட எந்த தலைவரையும் சிறையில் தள்ளுவோம் (lets throw kejriwal in jail) என பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது.
இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா குற்றம் சாட்டினார். இதை அடுத்து இந்த புதிய கலால் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் மணீஷ் சிசோடியா, சஞ்சய்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் புறக்கணித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளது. இந்த நிலையில், இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என டெல்லி மாநில மந்திரி ஆதிஷி பதிவு செய்த X பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆம் ஆத்மி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதுபோல, ஜார்க்ண்ட மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் டெல்லி முதல்வர், ஜார்க்ணட் மாநில முதல்வர் என ஊழலில் ஈடுபட்ட எந்த தலைவரையும் சிறையில் தள்ளுவோம் (lets throw kejriwal in jail) என பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் சம்மன்களை ஏற்று விசாரணையை சந்திக்காமல் தவிர்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/bjp-plan-bjp-wants-to-arrest-me-on-the-pretext-of-investigation-alleges-arvind-kejriwal/
கெஜ்ரிவால் ஆனாலும், சோரனாக இருந்தாலும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கான விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட தலைவர்கள் நாட்டின் மிக நேர்மையான மக்களை ஆட்சி செய்து வந்த காலம் மலையேறி விட்டது. ஊழலில் ஈடுபட்ட தலைவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும்.
ஊழலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின்படி சிறை கம்பிகளுக்கு பின்னால் தான் அடைக்கப்பட வேண்டும் என்ற உறுதியோடு நாங்கள் இருக்கிறோம்.
தன் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றால், கெஜ்ரிவால் ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை. இது போன்ற நாடகங்கள் இனி எடுபடாது.
தனக்கு கை விலங்கு மாட்டப்படுவது நெருங்கி வருவதை அவரும் உணர்ந்துள்ளார் என்று கூறினார்.