ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனித் திருவிழாவை ஒட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை ( Karaikal district ) அறிவித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஆண்டுதோறும் காரைக்காலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழா இந்த ஆண்டு 21-06-2024 அன்று நடைபெற உள்ளது . இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் PRN திருமுருகன் அவர்கள் முதலமைச்சர் ந ரங்கசாமி அவர்களிடம் இன்று (18-06- 2024) கோரிக்கை வைத்தார்.
Also Read : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியீடு..!!
இதையடுத்து அமைச்சர் திருமுருகனின் கோரிக்கையை ஏற்று 21.06.2024 அன்று காரைக்கால் மாவட்டத்தில் ( Karaikal district ) உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க முதலமைச்சர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.