Site icon ITamilTv

” கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே கொலை” – மதுரை மாநகர காவல்துறை பரப்பரப்பு விளக்கம்

madurai chithirai festival murder

madurai chithirai festival murder

Spread the love

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே நடைபெற்ற கொலை முன்பகை காரணமாக நிகழ்ந்தது எனவும், எனவே சித்திரைத் திருவிழாவிற்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் வாலிபர் கொலை :

மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டத்தில் மதுரை ஆழ்வார் புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை (வயது 28) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நண்பர்களான இவர்கள் இருவரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் இதுகுறித்து மதிச்சியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை, முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்னும் சந்தேகத்தில் மதிச்சியம் காவல் துறையினர் சிலரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே நடைபெற்ற கொலை முன்பகை காரணமாக நிகழ்ந்தது எனவும், எனவே சித்திரைத் திருவிழாவிற்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சித்திரைத் திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் கொலை..!!!

இது குறித்து மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : மதுரை மாநகர் மதிச்சியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் என்பவரின் மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அக்கயர் சாமி மகன் சதீஸ் என்பவருக்கும் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக கார்த்திக் மற்றும் சதீஸ் இடையே முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டிருந்த சதீஸ், இன்று (ஏப்.23) அதிகாலை 0130 மணியளயவில், ஆழ்வார்புரத்தில் சோனை என்பவருடன் நின்று கொண்டிருந்த கார்த்திக் என்பவரிடம், முன் பகையை மனதில் வைத்து, அவரிடம் வாக்குவாதம் செய்த போது, சதீஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கையும், அவருடன் நின்று கொண்டிருந்த சோனையையும் குத்தியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு அரசு இராஜாஜி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சையில் இருந்த சோனை என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது தொடர்பாக மதிச்சியம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளியான சதீஸ் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.

இந்த கொலைக்கும் சித்திரைத் திருவிழாவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இது முழுவதும் திருமணத்துக்கு மீறிய உறவு, முன்விரோதம் சம்பந்தமான இரு தனிப்பட்ட நபர்களிடையே உள்ள பிரச்னையாகும். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்படும் செய்தி தவறானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version