Site icon ITamilTv

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

maha-shivratri

maha-shivratri

Spread the love

maha shivratri | சிவராத்திரி, முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..

வரும் வெள்ளியன்று சிவராத்திரி, அதனைத் தொடர்ந்து வார இறுதி நாட்கள் வருவதால், கூடுதலான பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுக – தேமுதிக கூட்டணி இன்று உறுதியாகுமா..? -பரபரக்கும் தேர்தல் களம்!

இதனை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மார்ச் 7ஆம் தேதி 270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மார்ச் 8ஆம் தேதி 390 சிறப்பு பேருந்துகளும், 9ஆம் தேதி 430 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தலா 70 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1765302219983950111?s=20

பெங்களூரூ, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version