Male Reproduction : பொதுவாக ஆண்களுக்கு மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, அவர்களை சுற்றி காணப்படும் சூழ்நிலை ஆகியவை விந்தணுக்களின் எண்ணிக்கையை வெகுவாக பாதிக்கும்.
இதனை குணப்படுத்த பல வழிகள் இருந்தாலும், ஆயுர்வேத முறையில் சரி செய்வது ஆரோக்கியமான முறையாகும். எனவே, விந்தணு எண்ணிக்கையை (Male Reproduction) அதிகரிக்கும் 10 மூலிகை வைத்தியம் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
01. பாரம்பரிய மூலிகையான “காஞ்ச் பீஜ்” சிறந்த பாலுணர்வாக செயல்பட்டு பாலியல் ஆசையை அதிகரிக்கிறது. ஆகையால், இது விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் இது உடலியல் அழுத்தத்தை குறைத்து விந்தணு தரத்தை மேம்படுத்துகிறது.
02. “கோக்ஷூரா” எனப்படும் ஆயுர்வேத மூலிகை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து பாலியல் ஆசையை தூண்டுகிறது. கருவுறாமை சிகிச்சைக்கும் உதவும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
03. “அஸ்வகந்தா” மூலிகை செக்ஸ் டிரைவை அதிகரிக்க பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்தி விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது. மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வையும் குறைக்கிறது.
04. “சஃபேட் முஸ்லி” : இந்த மூலிகை பழங்காலத்திலிருந்தே பாலியல் செயல்பாடு மற்றும் கருவுறுதலை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
05. “சலாப் மிஸ்ரி” பாலியல் தொடர்பான கோளாறுகளை நிவர்த்தி செய்வதில் சக்திவாய்ந்த மூலிகை மருந்தாக உள்ளது. ஆராய்ச்சியின் படி, இது ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சையளிப்பதில் அருமருந்து.
06. “விதரி காண்ட்” மூலிகை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த மூலிகை. இயற்கையான பாலுணர்வு பண்புகளையும் கொண்டுள்ளது
07. “சூரியகாந்தி விதை” : இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. எனவே, விந்தணுக்களின் எண்ணிக்கை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.
08. “அகர்கரா” மூலிகை பதட்டத்தை குறைக்க உதவுகிறது. இது சக்திவாய்ந்த பாலுணர்வு பண்புகளைக் கொண்டுள்ளது. டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தூண்டுகிறது. கருவுறுதலை மேம்படுத்துகிறது.
09. “சலாம் பஞ்சா” ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகை. மோசமான விந்தணு எண்ணிக்கை, ஆண்மைக் குறைவு ஆகிய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த விநியோகத்தை அதிகரிக்கவும், விந்தணு இயக்கம் மற்றும் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
10. “ஷிலாஜீத்” ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது விந்தணு எண்ணிக்கை மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்துவதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்தும்.