Site icon ITamilTv

ஆண் வாரிசுக்காக மனைவியை காருடன் தீவைத்து எரித்துக் கொலை செய்த கொடூர கணவன்…!

Spread the love

மகாராஷ்டிராவில் (maharashtra) தனக்கு ஆண் வாரிசு இல்லாத விரகத்தியில் தனது மனைவியை காருடன் தீ வைத்து எரித்து கொன்ற கணவனின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா (maharashtra) மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டத்தின் கார்லா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்கள் அமோல் – சவிதா தம்பதி. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி என்று தனது மனைவி சவிதா உடன் காரில் சென்ற போது கார் விபத்து ஏற்பட்டு மனைவி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக அமோல் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், கடந்த ஜூன் 24ஆம் தேதி அன்று அமோலும் அவரது மனைவி சவிதாவும் காரில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, காரின் பின்பகுதியில் வேன் ஒன்று இடித்து விபத்துக்குள்ளானதாகவும் இதனால், தான் மட்டும் காரை விட்டு கீழே இறங்கி அந்த வேன் டிரைவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

அப்படி சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, தன்னுடைய கார் திடீரென்று தீப்பற்றி எரிந்து விட்டதாகவும், இதனால் காரினுள் சிக்கியிருந்த தனது மனைவி சவிதா தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இவரது புகாரில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, அவரைப் பிடித்து வைத்து விசாரணை செய்ததில் அதிர்ச்சி உண்மை வெளியானது. அந்த விசாரணையில், அமோலுக்கும் அவரது மனைவி சவிதாவிற்கும் திருமணம் ஆகி 13 ஆண்டுகளான நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும், தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என அமோல் நீண்ட நாளாக தனது மனைவியை தொந்தரவு செய்து வந்ததாகவும், இதற்காக மனைவியிடம் விவாகரத்து கேட்டும் வந்த நிலையில், விவாகரத்து தர மனைவி மறுத்ததால் அவரைத் தீர்த்து கட்ட திட்டமிட்ட அமோல் கோவிலுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஆள் நடமாற்றமற்ற பகுதியில் காரை நிறுத்தி மனைவியை காருக்குள் வைத்து பூட்டி தீ வைத்துக் கொளுத்தி கொலை செய்துள்ளார்.

மேலும், அதை விபத்து போலவும் காட்டியுள்ளார். இதனை அடுத்து அமோலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Spread the love
Exit mobile version