Site icon ITamilTv

பயங்கரவாதிகளிடம் சிக்கி பலியான மணிப்பூர் மாணவர்கள் – உருக்கமான தகவல்கள்!!

Spread the love

மணிப்பூரில் பள்ளி மாணவர்களை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் இந்திய மாநிலங்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்நிலையில், நீதி கோரி மணிப்பூர் மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வரும் நிலையில், இந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலத்தின் இயல்பு வாழ்க்கையும் நாசமான நிலையில், அண்மையில் தான் மணிப்பூரில் இணையசேவை இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் மணிப்பூரில் இயல்பு நிலைமை திரும்பும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால், மீண்டும் மணிப்பூரில் குக்கி இன பயங்கரவாதிகள் இரு மெய்தி இன மாணவர்களை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் மீண்டும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களான அந்த பிஞ்சு உள்ளங்களை கடத்திச் சென்று வாயில் துணியை கட்டி மண்டியிட வைத்து கொடூரமாக சித்ரவதை செய்து படுகொலை செய்திருக்கிறது குக்கி பயங்கரவாத கும்பல்.

இதுகுறித்து படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை அளித்துள்ள பேட்டியில்..

“என்னுடைய மகனோ, மகளோ இல்லை வேறு யாருடைய மகனோ, மகளோ அவர்கள் யாருக்கு என்ன தீங்கு செய்தார்கள்? ஏன் அவர்களை கடத்திச் சென்று இப்படி படுகொலை செய்ய வேண்டும்? என் மகன் கடந்த ஜூலை 6-ந் தேதி கடத்தப்பட்டார். அன்று முதல் அவன் வருவான் என அவனுக்கான உணவுகளை மேஜை மீது வைத்து காத்திருந்தோம். இப்போது என் மகனை உயிரற்ற சடலமாக எங்களிடம் ஒப்படைதுள்ளார்கள். இந்த துயரத்தை எப்படி நாங்கள் தாங்குவது?” என தெரிவித்துள்ளார்.

மேலும், படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் ஜெயஸ்ரீ கூறுகையில்..:

“கடந்த ஜூலை 6-ஆம் தேதியன்று நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு என் மகள் சென்றாள். சக மாணவர் ஒருவர் தான் என் மகளை அவருடைய இரு சக்கரவாகனத்தில் அழைத்துச் சென்றார். வெகுநேரமாகியும் என் மகள் வீடு திரும்பவில்லை. அவளுக்கு செல்போனும் எடுக்கப்படவில்லை. என் மகளின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது.

இப்போது சடலமாகதான் என் மகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாள். என் மகள் வனப்பகுதியில் சித்ரவதை செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் போது என் நெஞ்சம் வெடித்துப் போனது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை ஹிஜாம் குல்லாஜித் கூறுகையில்..

“எங்களுக்கு இப்போது தேவை நீதிதான்.. எங்கள் மகளையும் அந்த மாணவனையும் கொடூரமாக படுகொலை செய்த பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எங்கள் வலி எங்களுக்கு மட்டும் தான் தெரியும்” என்று வேதனைக் குரல் கொடுத்துள்ளார்.


Spread the love
Exit mobile version