Site icon ITamilTv

மணிப்பூர் நிர்வாண ஊர்வலம்: ”’முக்கிய குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய பெண்கள்!

Spread the love

மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரு சமூகத்தினரிடையே
இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் வன்முறை ஏற்பட்டு தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது.

இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், வன்முறையின்போது குக்கி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.நாடு முழுவதும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இந்த வீடியோவை கண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறுகிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிட நேரிடும் என எச்சரித்தார்.

மேலும் இந்த சம்பவதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, 2 இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர் .

இந்த நிலையில் பழங்குடியின பெண்களை சித்திரவதை செய்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியின் வீட்டை இடித்து தள்ளி சொந்த கிராம மக்கள் தீ வைத்துள்ளனர்.


Spread the love
Exit mobile version