ITamilTv

‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு – கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா!

Mannangkatti shooting completed

Spread the love

Mannangkatti shooting completed : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை ட்யூட் விக்கி இயக்குக்கிறார்.

முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை நயன்தாரா அன்னபூரணிபடத்தைத் தொடர்ந்து பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’.

இதையும் படிங்க : ‘ரோமியோ’ – விஜய் ஆண்டனியின் படம் மே 10-ல் ஓடிடியில் ரிலீஸ்!

இந்த படத்தை “ப்ளாக் ஷீப்” யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்குகிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் நயன்தாரா தவிர, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சான் ரோல்டன் படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவுடன், ஜி மதன் படத்தொகுப்பு செய்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது Mannangkatti shooting completed.

இதனை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மண்ணாங்கட்டி படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நாமக்கல் அருகே தெருநாய் கடித்து 3 சிறார்கள் காயம்!


Spread the love
Exit mobile version