வெளிநாடு முதலீடுகளை எப்படி ஈர்ப்பது என்பதை தமிழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாட்டில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று இலங்கை எம்பி மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 1948 பிறகு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. உணவு பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்தது அத்தியாவசிய விலைப் பொருள்களின் விலை தட்டுப்பாடு ஏற்பட்டது மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்தன. அரசாங்கத்திற்கு எதிரான ஏற்பட்ட கிளர்ச்சியில் போராட்டங்களை வன்முறைகளும் வெடித்தது.
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீது இருக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உடனடியாக தங்களின் தொழிலை தொடங்க தேவையான அனுமதிகளை இலங்கை அரசு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்த கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் கொழும்பு எம்பி மனோ கணேசன் காலம் காலமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து பேசி வருகிறோம்.
மேலும் இலங்கை அதிபர் ரன்னில் விக்கிரமசிங்கே தமிழகத்திற்கு தமது ஒரு குழுவை அங்கு அனுப்ப வேண்டும். தமது அண்டை மாநிலத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பார்த்து எப்படி வெளிநாடு முதலீடுகளை கவர்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் இலங்கை அரசுக்கு கருத்து சொல்லும் அளவிற்கு தமிழ்நாடு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.