Site icon ITamilTv

“மானம் குலம் கல்வி..”தினமலரின் திமிருக்கு..-கொந்தளித்த வைகோ !!

Spread the love

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை,திருக்குவளையில் முதலமைச்சர்தொடங்கி வைத்தார் . 13.1.2023 அன்று சட்டப்பேரவையில் அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இதற்காக 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் , தினமலர் நாளிதழில் வெளியான செய்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கும.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவர் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம்.”என்று பசியின் கொடுமை பற்றி தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னார்.

1928 ஆம் ஆண்டு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

அதன் பிறகு பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சியிலும், பின்னர் வந்த எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் மதிய உணவு திட்டம் சிறப்பாக நடைமுறைப் படுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான ஏழை எளிய குழந்தைகள் பசியின்றி பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் நிலை உருவானது. சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தை டாக்டர் கலைஞர் செயல்படுத்தினார்.

இந்நிலையில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலை உணவு திட்டத்தைக் கொண்டு வந்து தமிழ்நாடு கல்வித் துறையில் முன்னேற வழிவகை செய்தார் இலட்சக்கணக்கான குழந்தைகள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தினமலர் நாளேடு இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

சமூக நீதிக்கு எதிரான ஆணவ ஆதிக்க ஆரிய சனாதன மனப்பான்மை தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. தினமலரின் திமிருக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். பள்ளிக் குழந்தைகளின் காலை உணவு திட்டத்தை இழிவு படுத்திய தினமலர் நாளேடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.


Spread the love
Exit mobile version