Site icon ITamilTv

103 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் – 1.88 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தகவல்

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவமுகாம்கள் மூலம் 1.88 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி முழுவதும் 103 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் 24-6-2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதில் பதிவு செய்து பரிசோதித்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,88,885 பேர் ஆகும். இம்மருத்துவ முகாமில் சித்தா மற்றும் இந்திய மருத்துவத்திற்காக பதிவு செய்து பரிசோதனை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 35,138 பேர் ஆகும்.

நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பரிசோதித்து நோய் கண்டறியப்பட்டவர்களின் விவரம் இதோ :


Spread the love
Exit mobile version