Site icon ITamilTv

Melma cultivators : மேல்மா உழவர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? – அன்புமணி காட்டம்!

Melma cultivators

Melma cultivators

Spread the love

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்; உழவர்களை (Melma cultivators) தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்று,

போராட்டம் நடத்தி வரும் உழவர்கள் மீது தமிழக அரசு தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்கச் சென்ற 18 பெண்கள் உள்ளிட்ட 20 பேரை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது..

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர்,

நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 2700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,

அதைக் கண்டித்து அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக மேல்மா கூட்டுச் சாலையில் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, மேல்மா பகுதியில் போராடுபவர்களும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களும் வெளியூரைச் சேர்ந்தவர்கள்:

அவர்கள் பெயரில் நிலம் இல்லை என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதால் உழவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க சென்னை புறப்பட்ட அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து சந்திரன், மணிகண்டன்,

தேவன், பெருமாள். ராஜா, ரேணுகோபால், நேகாஜி, ஏழுமலை, மாசிலாமணி, கணேஷ் ஆகிய 10 உழவர்கள் மேல்மா கூட்டுச் சாலையில் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர்.

உழவர்களின் இந்தப் போராட்டத்தில் சுந்த விதிமீறலும் இல்லை. அவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் அவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் உண்ணாநிலை மேற்கொண்டுள்ள மேல்மா கிராமத்திற்கு நேற்றிரவு சென்ற காவல்துறை அவர்களில் இரு உழவர்களை கட்டாயமாக கைது செய்து வந்தவாசி மருத்துவமனையில் அனுமதித்ததனர்.

மீதமுள்ள 8 உழவர்களை இன்று அதிகாலை கைது செய்த காவல்துறை, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததால் 8 உழவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் மேல்மா போராட்டக் கனத்திற்கு சென்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு பதிலாக வேறு 10 பேர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, தொடர்ந்து விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசி வரும் அமைச்சர் வேலுவை பதவி நீக்கவேண்டும்; அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்:

மேல்மா உழவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது ஆகும். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே தமிழக அரசு தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது.

மேல்மா உழவர்களை (Melma cultivators) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேச வேண்டும்;

அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version